கனடாவின் புதிய பிரதமர் March மாதம் தெரிவு செய்யப்படவுள்ளார்.
Liberal கட்சி தனது புதிய புதிய தலைவரை March 9 அறிவிக்க உள்ளது.
கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9 தேர்ந்தெடுக்கப்படுவார் என Liberal கட்சி வியாழக்கிழமை ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
இந்த வாரம் நடைபெற்ற தொடர் சந்திப்புகளின் பின்னர் கட்சியின் தேசிய சபை வியாழன் இரவு இந்த முடிவு எடுத்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau இந்த வார ஆரம்பத்தில் அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
புதிய தலைவருக்கான போட்டியில் ஈடுபடவுள்ள வேட்பாளர்களுக்கான நுழைவுக் கட்டணம் 350,000 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் January 23 ஆம் திகதிக்குள் நுழைவுக் கட்டணம் செலுத்தி போட்டியிடும் தமது விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
புதிய தலைவரை தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஈடுபட விரும்புபவர்கள் கட்சி உறுப்பினர்களாக January 27 ஆம் திகதிவரை கட்சியில் இணைந்து கொள்ளலாம்.
14 வயதிற்கு மேற்பட்ட கனடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும் எனவும் கட்சி அறிவித்துள்ளது.
முன்னர், கனடியரல்லாத குடியிருப்பாளர்கள் கட்சியின் தலைமைப் போட்டிகளில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இது கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீட்டிற்கான ஆரம்பம் என எச்சரிக்கப்பட்டது.
Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த எச்சரிக்கையை கவனத்தில் எடுக்குமாறு கட்சி நிர்வாகிகளை வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.