Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் Dominic LeBlanc பெயரும் அடங்கியிருந்தது.
ஆனாலும் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என்ற தனது முடிவை புதன்கிழமை (08) சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமைச்சர் Dominic LeBlanc அறிவித்தார்.
2000 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள Dominic LeBlanc 2008 இல் Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டார்.
ஆனாலும் Michael Ignatieffபை ஆதரிப்பதற்காக அந்த போட்டியில் இருந்து அவர் வெளியேறினார்.
Dominic LeBlanc தற்போது நிதி, அரசாங்கங்களுக்கு இடையேயான விவகார இலாகாக்களுக்கு தலைமை தாங்குகிறார்.
Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.