உள்நாட்டு தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கனடிய தபால் திணைக்கள ஊழியர்கள் சுமார் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் சேவை நிலைகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன.
இந்த நிலையில் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்து மூன்று வாரங்களுக்கு பின்னர் உள்நாட்டில் முழு சேவை நிலைகளுக்கு திரும்பியுள்ளதாக கனடிய தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் சர்வதேச அஞ்சல், பரிவர்த்தனை அஞ்சல் உள்ளிட்டவற்றில் கனடியர்கள் தாமதங்களை தொடர்ந்து எதிர்பார்க்க வேண்டும் என கனடிய தபால் திணைக்களம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.