கனடாவின் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல் ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் Liberal கட்சியின் புதிய தலைமையை ஏற்பவர் கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்கும் சாத்தியக்கூறு தோன்றியுள்ளது.
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளர்கள் பட்டியலில் முன்னாள் நிதி அமைச்சர் Chrystia Freeland முன்னிலையில் உள்ளார்.
தவிரவும் கனடா மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney, அமைச்சர்களான Dominic LeBlanc, Mélanie Joly, Anita Anand, François-Philippe Champagne, Jonathan Wilkinson, முன்னாள் B.C. முதல்வர் Christy Clark உள்ளிட்டவர்களும் இந்த பதவியில் ஆர்வம் காட்டலாம் என கூறப்படுகிறது.