February 23, 2025
தேசியம்
செய்திகள்

அடுத்த வாரம் முக்கிய Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த வாரம் சந்திக்க உள்ளனர்.

Liberal கட்சியின் தேசிய நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Liberal கட்சியின் பிராந்திய நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்திற்கு பின்னர், தேசிய நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் Justin Trudeauவின் தேசிய Liberal நாடாளுமன்ற குழு தலைவர்கள் சிறப்பு கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை (08) நடைபெறும் என தெரியவருகிறது.

Liberal கட்சியின் பிராந்திய நாடாளுமன்ற குழு தலைவர்கள் வெள்ளிக்கிழமை (03) பிற்பகல் சந்தித்தனர்.

Justin Trudeauவின் தொடர்ச்சியான தலைமை, கட்சியின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

புதன்கிழமை மெய்நிகர் வழியாக நடைபெறும் இந்த தேசிய நாடாளுமன்ற குழு தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுவது  குறித்து பரிசீலிக்குமாறு தேசிய நாடாளுமன்ற குழு தலைவரிடம் பிராந்திய நாடாளுமன்ற குழு தலைவர்கள் கோரினார்கள்.

அந்த கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் இது ஒரு நீண்ட சந்திப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து பிரதிபலிப்பதாக கூறிய பின்னர் Justin Trudeau முதல் முறையாக தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளார்.

Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் நாடு முழுவதும் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து அதிகரித்ததை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

Related posts

Winnipeg சுற்றுலாத் தளத்தில் நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 17 பேர் காயம்

Lankathas Pathmanathan

Brampton நகரில் பட்டாசுகளின் விற்பனையும் பயன்பாடும் தடை

Lankathas Pathmanathan

Ontarioவில் கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகள் நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment