Ontario வாசிகளுக்கு மாகாண அரசின் $200 காசோலைகள் இந்த மாத இறுதியில் அல்லது February மாத ஆரம்பத்தில் அனுப்பப்படும் என தெரியவருகிறது.
Ontario அரசாங்க செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை (03) இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
Ontario மாகாணத்தில் வரி செலுத்துவோர் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் தங்கள் காசோலையை எதிர்பார்க்கலாம் என முதல்வர் Doug Ford தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்கான சரியான காலக்கெடு பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.
அதிக வாழ்க்கைச் செலவு, மத்திய carbon வரி ஆகியவற்றை எதிர்கொள்ள இந்த பணம் உதவும் என Doug Ford நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
வரி செலுத்துவோர் இந்த கொடுப்பனவுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை.
2023 ஆம் ஆண்டின் இறுதியில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய, கடந்த மாத இறுதிக்குள் அந்த ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்த அனைத்து Ontario வாசிக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.
குழந்தைகள் உள்ள Ontario வாசிகள், 18 வயதுக்குக் குறைந்த தகுதி வாய்ந்த குழந்தைக்கு மேலதிகமாக $200 பெறுவார்கள்.
இந்த கொடுப்பனவால் Ontario மாகாணத்திற்கு 3 பில்லியன் டாலர் செலவாகும் என அரசாங்கம் கூறியது.