கனடாவின் அநேக மாகாணங்கள், பிராந்தியங்களுக்கு வாரயிறுதியில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளிர்கால வானிலை Newfoundland and Labrador, Nova Scotia, Quebec, Ontario, Manitoba, Saskatchewan, Alberta, British Columbia மாகாணங்கள், மூன்று பிரதேசங்களில் சுற்றுச்சூழல் கனடா மூலம் எச்சரிக்கைகளை தூண்டியது.
இந்த மாகாணங்கள், பிரதேசங்களின் பல சமூகங்களுக்கு வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ளன.
தற்போது வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இல்லாத மாகாணங்களாக New Brunswick, Prince Edward Island மாத்திரம் உள்ளன.
Ontario மாகாணத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (04) மாலைக்குள் 60 CM வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடா வானிலை ஆய்வாளர்கள் Quebec மாகாணத்தில் சனி நண்பகல் வரை கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என எச்சரித்துள்ளனர்.