தேசியம்
செய்திகள்

Conservative தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை: NDP நாடாளுமன்ற உறுப்பினர்

Justin Trudeau தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான Conservative தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என NDP நாடாளுமன்ற உறுப்பினர் Charlie Angus தெரிவித்தார்.
Conservative தலைவர் Pierre Poilievreரை அதிகாரத்தில் அமர்த்தும் வகையிலான எந்த முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்க போவதில்லை என அவர் கூறினார்.
January 27 அன்று நாடாளுமன்றம் கூடியவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதாக NDP தலைவர் Jagmeet Singh இந்த மாத ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதியுடன் Charlie Angusசின் நிலைப்பாடு முரண்படுகிறது.
அடுத்த  நாடாளுமன்ற சபை அமர்வில் தனது கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைக்கும் என NDP தலைவர் Jagmeet Singh அண்மையில் கூறியிருந்தார்.

Related posts

25 சதவீதமானவர்கள் COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Gaya Raja

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan

இரண்டாவது இடைத் தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment