தேசியம்
செய்திகள்

January 30 ஆம் திகதி Justin Trudeau அரசாங்கம் கவிழும்?

January மாதம் 30 ஆம் திகதி Justin Trudeau தலைமையிலான அரசாங்கம் கவிழும் சாத்தியக்கூறு அதிகம் தோன்றியுள்ளது.

January மாதம் பிற்பகுதியில் Justin Trudeau அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்புக்கு Conservative கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Jonathan Williamson இந்த நம்பிக்கை இல்லை பிரேரணையை புதிய வருடத்தின் ஆரம்பத்தில் முன் வைக்கவுள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் மூலம் பிரதமர் Justin Trudeauவின் அரசாங்கம் ஒரு மாத காலத்தில் கவிழும் நிலை தோன்றியுள்ளது.

நாடாளுமன்ற சபை அமர்வுகள் January 27 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கின்றன.

இந்த நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்களிப்பு January 30  ஆம் திகதி நடைபெற்று, அது வெற்றி பெற்றால் உடனடியாக தேர்தல் ஒன்று நடைபெறுவது சாத்தியமாகும்.

Conservative கட்சி முன்வைத்த மூன்று நம்பிக்கையில்லா தீர்மானங்கள் இலையுதிர்காலத்தில் தோல்வியடைந்தன.

ஆனால் இப்பொழுது இத்தகைய நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க தயார் என NDP தலைவர் Jagmeet Singh கூறியுள்ளார்.

முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland பதவி விலகுவதாக அறிவித்த நிலையில் இந்த நிலை தோன்றியுள்ளது.

Related posts

மருந்துகளின் விலையை குறைக்கும்  புதிய விதிமுறைகளில் தாமதம்

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கு கனடா 10 மில்லியன் டொலர் நிதியுதவி: பிரதமர்

Gaya Raja

Humboldt Broncos பேருந்து விபத்தின் ஆறாவது ஆண்டு நினைவு

Lankathas Pathmanathan

Leave a Comment