Justin Trudeau பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அவரது இடத்திற்கு Chrystia Freeland பொருத்தமானவர் என தெரிவிக்கப்படுகிறது.
Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.
பிரதமரின் தலைமை குறித்து பல மாத காலம் கேள்விகள் எழுந்த நிலை உள்ளது.
அமைச்சரவையில் இருந்து விலகிய Chrystia Freeland நிலையில் பிரதமரின் தலைமை மேலும் உறுதியற்றதாகி உள்ளது.
Justin Trudeau பதவி விலகி, முன்கூட்டிய தேர்தலுக்கு முன்னதாக ஒரு புதிய தலைவருக்கு வழிவிடுமாறு அதிகரித்த எண்ணிக்கையிலான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளனர்.
Justin Trudeau பதவி விலக வேண்டும் என் Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 21 பேர் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு முன்னாள் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland பொருத்தமானவர் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.
அமைச்சரவையில் Chrystia Freeland கொண்டிருந்த அனுபவம், குறிப்பாக சுதந்திர வர்த்தகம் குறித்த பேச்சுக்களில் அமெரிக்காவைக் கையாள்வதில் அவர் கண்ட வெற்றிகளை சுட்டிக் காட்டுகின்றனர்.
பிரதமர் பதவி விலகினால் அவருக்கு பதிலாக Chrystia Freeland தவிர வேறு சிலரின் பெயர்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.