British Columbia மாகாணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.
தொடர்ந்து பெய்யும் மழை, பலத்த காற்று காரணமாக மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலை தோன்றியுள்ளது.
புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி 6,500 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாத நிலை உள்ளதாக BC Hydro தெரிவித்துள்ளது.
மாகாணம் முழுவதும் காற்று, மழை எச்சரிக்கைகள் பல நடைமுறையில் உள்ளன