அமெரிக்காவின் Florida மாநிலத்தில் படகு வெடித்ததில் கனடியர் ஒருவர் மரணமடைந்தார்.
மரணமடைந்தவர் கனடாவின் Quebec மாகாணத்தை சேர்ந்தவர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
படகு வெடித்ததில் 41 வயதான Sebastien Gauthier என்பவர் திங்கட்கிழமை (23) மரணமடைந்தார்.
இதில் காயமடைந்த ஐந்து பேரை மீட்புப் பணியாளர்கள் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.
இவர்களில் மூன்று பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கனடியர் ஒருவரின் மரணம் குறித்து அறிந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.