Toronto பெரும் பாகத்திற்கான குளிர்கால வானிலை பயண எச்சரிக்கையை சுற்றுச்சூழல் கனடா வெளியிட்டுள்ளது.
Toronto பெரும்பாகத்தில் திங்கட்கிழமை (23) 5 முதல் 15 CM வரை பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என எதிர்வு கூறப்படுகிறது.
காலை சில centimetres மட்டும் எதிர்பார்க்கப்படும் பனிப்பொழிவு பிற்பகல் முதல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
Barrie, Bracebridge, Gravenhurst, Parry Sound உட்பட Toronto பெரும்பாகத்தின் வடக்கே உள்ள பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
இந்தப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை 20 CM வரை பனிப்பொழிவு எதிர்வு கூறப்படுகிறது.