நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட Justin Trudeau அரசின் அமைச்சரவை மாற்றம் வெள்ளிக்கிழமை (20) நிகழும் என தெரியவருகிறது.
பிரதமர் தனது அமைச்சரவையை வெள்ளிக்கிழமை மாற்ற திட்டமிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து Chrystia Freeland திடீரென விலகிய பின்னர் கனடாவின் புதிய நிதியமைச்சராக Dominic Leblanc நியமிக்கப்பட்டார்.
Justin Trudeau அமைச்சரவையில் பல அமைச்சு பதவிகள் வெற்றிடமாக உள்ளன
அண்மைய மாதங்களில் பல அமைச்சர்கள் தங்கள் அமைச்சரவை பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
மேலும் சிலர் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.
இதனால் ஒரு சில அமைச்சர்கள் பல இலாகாக்களை கையாளுகின்ற நிலை தோன்றியுள்ளது.
இந்த நிலையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த முழு அமைச்சரவை மறுசீரமைப்பு நிகழ்கிறது.
ஆளுநர் நாயகத்தின் வாசஸ்தலத்தில் புதிய அமைச்சர்கள் வெள்ளி காலை பதவி ஏற்பார்கள் என தெரியவருகிறது.