2023-24 ஆம் ஆண்டிற்கான பற்றாக்குறையாக 61.9 பில்லியன் டாலர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலையுதிர் கால பொருளாதார அறிக்கையை திங்கட்கிழமை (16) மத்திய அரசின் நிதி அமைச்சு வெளியிட்டது.
அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கள் காலை அறிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற குழு தலைவர் Karina Gould மத்திய அரசின் பொருளாதார அறிக்கையை வெளியிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump கனடாவிலிருந்து அனைத்து இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க அறிவித்துள்ள நிலையில் இந்த பொருளாதார அறிக்கை வெளியானது.
இந்த பொருளாதார அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை வாக்குறுதியளிக்கப்பட்டதை விட அதிகமானதாகும்.
பொருளாதார அறிக்கையில் புதிய செலவினங்களுக்கு 20 பில்லியன் டாலர்களுக்கு அதிகமான தொகை அறிவிக்கப்பட்டது.
இதில் ஆறு ஆண்டுகளில் எல்லைப் பாதுகாப்புக்கு 1.3 பில்லியன் டாலர் உறுதியளிக்கப்பட்டது.