February 22, 2025
தேசியம்
செய்திகள்

இலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கனடா வருகை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனடா வந்தடைந்துள்ளனர்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஆகியோர் கனடா வந்தடைந்துள்ளனர்.
கனடிய  வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் சிவஞானம் சிறிதரன் கனடா வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை (15) Toronto Pearson விமான நிலையம் வந்தடைந்த சிவஞானம் சிறிதரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு வழங்கியுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் Indo-Pacific பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் Weldon Epp உள்ளிட்டவர்களை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
இந்தச் சந்திப்பு தலைநகர் Ottawaவில் உள்ள கனடிய வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது.
அதன்போது, பொறுப்புக்கூறல், Indo-Pacific பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பல விடயங்கள் உரையாடப்படவுள்ளன.
அடுத்த வாரம் திங்கட்கிழமை (23) வரையில் கனடாவில் தங்கியிருக்க உள்ள  சிவஞானம் சிறிதரன் பல்வேறு தரப்பினரையும் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனுக்கு கனடா வாழ் திருகோணமலை மாவட்ட மக்கள் சார்பில் வரவேற்பும் விருந்துபசாரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
சிவஞானம் சிறிதரன், வியாழக்கிழமை (19) Montreal நகரிலும், சனிக்கிழமை (21) Toronto நகரிலும், மக்கள் சந்திப்புகளை நடத்த ஏற்பாடாகியுள்ளது என அவரது ஆதரவாளர்கள் மூலம் தெரியவருகிறது.

Related posts

ஏழு மாகாணங்களுக்கு வானிலை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Gaya Raja

Uyghur இஸ்லாமியர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் ; உலகின் கவலைகளை சீனா கவனத்தில் எடுக்க வேண்டும் : கனடிய பிரதமர் வலியுறுத்தல்

Gaya Raja

Leave a Comment