கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் குறைத்தது.
கனடாவின் மத்திய வங்கி தொடர்ந்து ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களை குறைத்துள்ளது.
மத்திய வங்கி புதன்கிழமை (11) 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.
கனடாவின் பொருளாதாரம் கணிக்கப்பட்டதை விட மெதுவான விகிதத்தில் வளர்ந்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
கனடாவின் வேலையற்றோர் விகிதம் November மாதம் 6.8 சதவீதமாக உயர்ந்தது வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான மற்றொரு காரணியாகும்.
கனடிய மத்திய வங்கியின் அடுத்த திட்டமிடப்பட்ட வட்டி விகித அறிவிப்பு January 29, 2025 ஆகும்.
கனடிய மத்திய வங்கி அறிவித்த வட்டி விகித குறைப்புக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்கள் பிரதான கடன் விகிதங்களைக் கனடிய நிதி நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.