இலங்கை அரசாங்கத்தின் கனடிய தூதுவரை மதிப்பளித்தமைக்கு கனடா கந்தசாமி ஆலய நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்ட அறிக்கையில் இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீதான இனவழிப்பை அரங்கேற்றிய இலங்கை அரசின் பிரதிநிதியை மதிப்பளிக்கும் முடிவினால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வலி, துன்பம் போன்றவைகளுக்கு மனம் வருத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஆலய நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த வெளிப்படையான வகையில் தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் நன்மதிப்பையும் முன்னுரிமைகளையும் வெளிப்படுத்தும் செயல்முறைகளை ஏற்படுத்துவோம் என அந்த அறிக்கை கூறுகிறது.