தேசியம்
செய்திகள்

Conservative நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை: NDP தலைவர் உறுதி

Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிரான Conservative கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க போவதில்லை என NDP தலைவர் தெரிவித்தார்.

Liberal அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணையை அறிமுகப்படுத்த Conservative கட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பதன் மூலம்  Conservative தலைவர் Pierre Poilievreருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கபோவதில்லை என NDP தலைவர் Jagmeet Singh கூறினார்.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை வியாழக்கிழமை  (05) முன்வைக்கப்படும் எனவும், விவாதம், வாக்கெடுப்பு திங்கட்கிழமை  (09) நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Liberal அரசாங்கம் குறித்த NDP தலைவரின் விமர்சனத்தை மேற்கோள் காட்டி இந்த பிரேரணையை அறிமுகப்படுத்த NDP திட்டமிட்டுள்ளது.

இந்த விடயத்தில் Jagmeet Singh உடன் உடன் படுவதாகவும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை எனவும் இந்த பிரேரணை வலியுறுத்துகிறது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை எனவும் அதன் மூம் தேர்தலைத் தூண்டப் போவதில்லை எனவும் Jagmeet Singh கூறினார்.

Related posts

Austria அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

Ontarioவில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

கனடா 13 million தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குகின்றது!

Gaya Raja

Leave a Comment