கனடாவிற்கு அனுப்பப்படும் தபால்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை – U.S. Postal Service – இடை நிறுத்தியுள்ளது.
கனடாவில் தொடரும் Canada Post ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த தற்காலிக முடிவை அமெரிக்க தபால் சேவை எடுத்துள்ளது.
மறு அறிவித்தல் வரை, கனடாவுக்கு அனுப்பப்படும் தபால்களை, பொருட்களை அஞ்சல் செய்வதைத் தவிர்க்குமாறு வாடிக்கையாளர்களைக் அமெரிக்க தபால் சேவை கோரியுள்ளது.
நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு வாரங்கள் தாண்டி தொடர்கிறது.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான முன்மொழிவுகளை Canada Post நிர்வாகம், தொழில் சங்கத்திற்கு வழங்கியுள்ளது.
தமது தரப்பு இந்த முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்து வருவதாக கனடிய தபால் ஊழியர் சங்கம் கூறியது.