வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை Canada Post நிர்வாகம் பணி நீக்கம் செய்து வருவதாக Canada Post ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கனடிய தபால் ஊழியர்களின் தொழில் சங்கம் தெரிவிக்கிறது.
இந்த பணி நீக்கங்களை உறுதிப்படுத்திய Canada Post செய்தித் தொடர்பாளர் Lisa Liu, அவை தற்காலிகமானவை என கூறினார்.
இந்த பணிநீக்கங்களை ஒரு “பயமுறுத்தும் தந்திரம்” என குறிப்பிட்டு ம் தொழில் சங்கம், நிலைமைகளை தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக கூறுகிறது.
நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இரண்டு வாரங்களாக தொடர்கிறது.
தொடரும் வேலை நிறுத்தத்தில் ஒரு தீர்வைக் காண்பதற்கு இரு தரப்பினர் மட்டுமே பொறுப்பு என தொழிலாளர் அமைச்சர் Steven MacKinnon அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு உதவ நியமிக்கப்பட்ட மத்திய அரசின் சிறப்பு மத்தியஸ்தர் தனது மத்தியஸ்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.