British Colombia மாகாணத்தின் இந்து ஆலயத்திற்கு வெளியே மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வார இறுதியில் Surrey நகரில் உள்ள ஒரு இந்து ஆலயத்திற்கு வெளியே முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
லட்சுமி நாராயண் மந்திர் ஆலயத்துக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை இந்த போராட்டம், எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பிட்ட ஆலயத்தில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் பிரசன்னத்தை எதிர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மூத்தவர்களுக்கு ஓய்வூதியம் பெற உதவுவது போன்ற நிர்வாக சேவைகளை வழங்குவதற்காக இந்திய துணை தூதரக அதிகாரிகள் திட்டமிட நடவடிக்கையை ஆலயத்தில் முன்னெடுத்திருந்தனர்.
அங்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் என RCMP தெரிவித்தது.
ஆர்ப்பாட்ட குழுக்களிடையே வன்முறை தோன்றியதில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் தனிநபர்களுக்கு, காவல்துறை அதிகாரிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
குறிப்பிட்ட கைதுகள் நிகழ்ந்த ஒரு மணி நேரத்தில் ஆர்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் அதிகரிக்கும் சமூக பிளவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க லட்சுமி நாராயண் மந்திர் ஒரு அறிக்கையில் மத்திய, மாகாண அரசியல்வாதிகள் வலியுறுத்தியது.
Brampton நகரில் உள்ள மற்றொரு இந்து ஆலயத்திற்கு வெளியே வார இறுதியில் இது போன்ற ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு அது வன்முறையாக மாறியது குறிப்பிடத்தக்கது.