தேசியம்
செய்திகள்

இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் கண்டனம்

Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தில் நடந்த போராட்டத்தின் போது நிகழ்ந்த தாக்குதல் குறித்து கனடிய அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தை “ஏற்றுக்கொள்ள முடியாது” என பிரதமர் Justin Trudeau கண்டித்தார்.

Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singh ஆகியோரும் இந்த வன்முறைக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

இந்த வன்முறையை கண்டிப்பதாக Pierre Poilievre குறிப்பிட்டார்.

அமைதிக்கு அழைப்பு விடுப்பதில் சமூகத் தலைவர்களுடன் இணைந்து கொள்வதாக Jagmeet Singh தெரிவித்தார்.

இந்த தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை என குறிப்பிட அமைச்சர் அனிதா ஆனந்த், “இந்த சம்பவம் குறித்து கவலையடைகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஆலயத்தில் நிகழ்ந்த வன்முறை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என கூறிய Ontario முதல்வர் Doug Ford இது கண்டிக்கப்பட வேண்டியது என தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்களில் வன்முறை ஒருபோதும் அனுமதிக்கப்படாது என Brampton நகர முதல்வர் Patrick Brown கூறினார்.

இந்த வன்முறைச் செயல்களால் ஆழ்ந்த ஏமாற்றம் அடைவதாக Mississauga நகர முதல்வர் Carolyn Parrish கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்  Ruby Sahota, Mississauga நகரில்  7 ஆம் வட்டார சபை உறுப்பினர்  Dipika Damerla  உள்ளிட்ட பலரும் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளனர்.

Related posts

எதிர்வரும் 7 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

விமான விபத்தில் பலியான கனடியர்களின் அடையாளம் வெளியானது

Lankathas Pathmanathan

நிரந்தர குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு!

Lankathas Pathmanathan

Leave a Comment