தேசியம்
செய்திகள்

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Toronto போக்குவரத்து சபையின் (TTC) பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை (31) அதிகாலை 4.30 மணியளவில் Finch – Yonge சந்திக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது.

பேருந்தில் பயணித்த ஏழு பேரும், pickup truckகில் பயணித்த ஒருவரும் இதில் காயமடைந்ததாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் பேருந்தின் சாரதி, ஆறு பயணிகள், pick up truckகில் பயணித்த ஒருவரும் அடங்குவதாகவும் காவல்துறையினர் மேலும் கூறினர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் மூவரின் காயங்கள் கடுமையானவை என தெரியவருகிறது.

ஆனாலும் அவர்களில் எவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்படவில்லை என அவசர உதவி பிரிவினர் கூறினர்.

இந்த விபத்தை தொடர்ந்து, pickup truck சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பியோட முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டார்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

இந்த விபத்து குறித்த விசாரணையில் காவல்துறையினருக்கு உதவி வருவதாக TTC தலைவர் Greg Percy தெரிவித்தார்.

Related posts

Scarborough கத்திக் குத்தில் தமிழ் பெண் மரணம் – சகோதரர் கைது!

Lankathas Pathmanathan

கனேடியர்கள் எகிப்து வழியாக காசாவை விட்டு வெளியேறும் திட்டம் இரத்து!

Lankathas Pathmanathan

CERB கொடுப்பனவுகளை தவறான முறையில் பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்படும் CRA ஊழியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment