ரஷ்யாவில் கனடியர் ஒருவரின் மரணம் குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனாலும் இறந்த கனடியர் உக்ரைனுக்காக போரிட ரஷ்யாவிற்குள் நுழைந்தவர்.என்ற தகவலை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
வெளிநாட்டுப் போராளி என்ற அறிக்கையை உலகளாவிய விவகாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.
உக்ரைன் எல்லையை ஒட்டிய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (27) நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது ஒரு கனடியர் உட்பட நான்கு வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனாலும் இந்த செய்தியை உறுதிப்படுத்த கனடிய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது.
கனடியர் ஒருவரின் மரணம் குறித்து மத்திய அரசு அறிந்திருப்பதாகவும், இறந்தவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.