தேசியம்
செய்திகள்

தேர்தல் ஒன்றிற்கு தயார்: Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet

தேர்தல் ஒன்றிற்கு தயாராக உள்ளதாக Bloc Québécois தலைவர் Yves-Francois Blanchet தெரிவித்தார்.
சிறுபான்மை Liberal அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Bloc Québécois கட்சி தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த கருத்தை அவர் கூறினார்.
சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு விதித்த நிபந்தனைகளை Liberal கட்சி நிறைவேற்றாத நிலையில் இந்த முடிவை Bloc Québécois கட்சி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான உரையாடலை ஆரம்பிக்க Conservative, புதிய ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர்களுக்கு Bloc Québécois கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் கவிழும் அபாயத்தில் இருப்பதாக Yves-Francois Blanchet செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.
இரண்டு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை Liberal அரசாங்கத்திற்கு Bloc Québécois கட்சி விதித்திருந்தது.
Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கடந்த மாதம் இந்தக் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய NDP நம்பிக்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களுக்கு பின்னர் இந்த நிபந்தனையை Bloc Québécois விதித்திருந்தது.
இலையுதிர்கால நாடாளுமன்ற அமர்வில் இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களில் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

Related posts

ஒருமுறை பயன்படுத்தும் plastic மீதான தடை அமுலுக்கு வந்தது

Lankathas Pathmanathan

March இறுதிக்குள் Ontario வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

Ontarioவில் வாகன உரிமத் தகடுகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம்

Lankathas Pathmanathan

Leave a Comment