British Columbia மாகாண தேர்தலில் NDP கட்சி வெற்றி பெற்றுள்ளது.
October 19 ஆம் திகதி British Columbia மாகாண சபை தேர்தல் நடைபெற்றது.
பல வாரங்கள் நிகழாமல் இருந்த இறுதி வாக்குகளின் எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் முதல்வர் David Eby தலைமயிலான NDP கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
திங்கட்கிழமை (28) இரவு மீதமிருந்த அனைத்து வாக்குகளையும் கணக்கிட்ட பின்னர், B.C.தேர்தல்கள் திணைக்களம் மாகாணத்தின் 93 தொகுதிகளில் 47 இல் NDP வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தது.
இதன் மூலம் NDP கட்சிக்கு குறுகிய பெரும்பான்மை கிடைத்துள்ளது.
இம்முறை Conservative வேட்பாளர்கள் 44 தொகுதிகளில், B.C.பசுமை வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆனால் இரண்டு தொகுதிகளில் வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்குகளின் வேறுபாடு நெருக்கமாக உள்ள நிலையில் மீள் எண்ணிக்கை நிகழவுள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் NDP, மற்றொன்றில் Conservative கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.
இந்தத் தொகுதிகளில் மறு எண்ணிக்கை அவசியமாகும் நிலையில் அமையவிருப்பது பெரும்பான்மையா அல்லது சிறுபான்மை அரசாங்கமா என்ற இறுதியில் தீர்மானம் மாற்றமடையும் நிலை தோன்றியுள்ளது.