தேசியம்
செய்திகள்

அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் இணையுமா Bloc Québécois?

சிறுபான்மை Liberal அரசாங்கத்தை பதவி விலக்க ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு Bloc Québécois கட்சி தயாராகிறது.
சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு விதித்த நிபந்தனைகளை Liberal கட்சி நிறைவேற்றாத நிலையில் இந்த முடிவை Bloc Québécois கட்சி எடுத்துள்ளது.
இரண்டு முக்கிய சட்டமூலங்களை  நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை Liberal அரசாங்கத்திற்கு Bloc Québécois கட்சி விதித்திருந்தது.
Bloc Québécois தலைவர் Yves-François Blanchet கடந்த மாதம் இந்தக் காலக்கெடுவை நிர்ணயித்திருந்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்கிய NDP நம்பிக்கை ஒப்பந்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களுக்கு பின்னர் இந்த நிபந்தனையை Bloc Québécois விதித்திருந்தது.
இந்த நிபந்தனையை Liberal அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில் Bloc Québécois இந்த முடிவை எடுத்துள்ளது.
இம்முறையை இலையுதிர்கால நாடாளுமன்ற அமர்வில் பிரதான எதிர்க்கட்சியான Conservative முன்னெடுத்த இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களில் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு நம்பிக்கையில்லா தீர்மானங்களில் Liberal அரசாங்கத்திற்கு ஆதவாக Bloc Québécois NDP வாக்களித்திருந்தன.

Related posts

Ontarioவில் 700ஐ அண்மிக்கும் ஏழு நாட்களுக்கான தொற்றுக்களின் சராசரி!

Gaya Raja

B.C. மாகாணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

கனேடியர்களில் ஐம்பது சதவீதத்தினர் COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்

Leave a Comment