Nobleton நகரில் வீடொன்றில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைதானார்.
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை 22) இந்த சம்பவம் நிகழ்ந்தது.
Nobleton நகரில் பகல் நேரத்தில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்து York பிராந்திய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த காவல்துறையினரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது.
இதில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை.
இதில் ஒரு சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைதானவர் யசந்தன் கந்தையா என அடையாளம் காணப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 10 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது இவருக்கு எதிராக தடை உத்தரவுகள் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் தெடர்புடைய இரண்டாவது சந்தேக நபரின் விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை.