Halifax நகர Walmart நிறுவனமொன்றில் மரணமடைந்த பெண் ஊழியர் அடையாளம் காணப்பட்டார்.
கடந்த வார இறுதியில் இந்த மரணம் நிகழ்ந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (19) இரவு Walmart நிறுவனத்திற்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டனர்.
அங்கு வெதுப்பகத்தில் பெண் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
இதில் மரணமடைந்த ஊழியர் 19 வயதான Gursimran Kaur என அடையாளம் காணப்பட்டார்.
இவரது உடலை அவரது தாயார் கண்டுபிடித்ததாக Maritime சீக்கியர் சங்கம் கூறுகிறது.
இவரது தாயாரும் இதே நிறுவனத்தில் கடமையாற்றி வருவதாக தெரியவருகிறது
இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் கடமையாற்றி வருகின்றனர்.
இதில் இறந்த பெண் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயுடன் Nova Scotia மாகாணத்தில் குடிபெயர்ந்தார்.
இவரது தந்தையும் சகோதரரும் இந்தியாவில் வசித்து வருவதாக தெரியவருகிறது
இந்த சம்பவம் குறித்த விசாரணை தொடரும் நிலையில் மரணம் நிகழ்ந்த விதம், அதற்கான காரணம் உட்பட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காவல்துறையினர் விசாரணையை தொடரும் நிலையில் குறிப்பிட கடை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.