Justin Trudeau பதவி விலகுவது கனடாவின் நலனுக்கு சிறந்ததாக அமையும் என Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Sean Casey தெரிவித்தார்.
Pierre Poilievre தலைமையிலான Conservative அரசாங்கத்தைத் தவிர்ப்பதற்காக பிரதமர் Justin Trudeau பதவி விலகுவது நாட்டின் நலனுக்காக சிறந்ததாக அமையும் என தான் கருதுவதாக Sean Casey கூறினார்.
ஒரு வார கால இடைவெளியின் பின்னர் சபை அமர்வுகள் திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமான நிலையில் இந்தக் கருத்து வெளியானது.
இந்த நிலையில் பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
Justin Trudeauவை பதவி விலகுமாறு அழைப்பு விடுக்கும் கடிதத்தில் கையொப்பமிட்ட 30 Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களில் தானும் ஒருவர் என்பதை Sean Casey உறுதிப்படுத்தினார்.
புதன்கிழமை (23) நடைபெறும் Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமரின் தலைமை குறித்த கேள்விகள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பான்மையான Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து பிரதமர் Justin Trudeauவை தலைவராக ஆதரிப்பதாக துணைப் பிரதமர் Chrystia Freeland அண்மையில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.