தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைப்பாரா பிரதமர்?

நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒரு வார கால இடைவெளியின் பின்னர் சபை அமர்வுகள் திங்கட்கிழமை (21) மீண்டும் ஆரம்பித்தது.

புதன்கிழமை (23) நடைபெறும் Liberal கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரதமரின் தலைமை குறித்த கேள்விகள் முன்னிலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அதிருப்தியில் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை பதவி விலகிக் கொள்ளுமாறு கோருவார்கள் என செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தச் சவாலை எதிர்கொள்ளும் முகமாக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சர்ச்சைக்குரிய நடவடிக்கையை Justin Trudeau மேற்கொள்ளலாம் என கூறப்படுகிறது.

இது சபை அமர்வை முடித்து புதிய சிம்மாசன உரைக்கு நேரம் அமைக்கும் நிலையை தோற்றுவிக்கும்.

Justin Trudeau பதவி விலகினால், Liberal தலைமைப் போட்டிக்கான கால அவகாசத்தை இது வழங்கும் என கருதப்படுகிறது.

விரைவில் தனது அமைச்சரவையை மாற்றி அமைக்கவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிடாத நான்கு அமைச்சர்களை மாற்ற வேண்டிய நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம்  நிகழவுள்ளது.

அடுத்த ஆண்டு October மாதம் ஒரு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

ஆனால் Liberal அரசாங்கம் சபையின் நம்பிக்கையை இழந்தால் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறும் சாத்தியக்கூறு உள்ளது.

Related posts

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளில் Gord Downie & Chanie Wenjack நிதியத்துக்கு (DWF) கனேடியத் தமிழர் பேரவை நிதி வழங்கல்!

Gaya Raja

கனடாவில் ஒரே நாளில் நான்காயிரத்திற்கும் அதிக தொற்றுக்கள்!

Gaya Raja

சுய-தனிமை காலத்தில் மாற்றம் – சோதனை விதிகளில் மாற்றம்: Ontario மாகாணம் அறிவித்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment