வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.
Conservative கட்சி உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் அல்லது வெளிநாட்டுத் தலையீடு குறித்த அதிக ஆபத்தில் உள்ளனர் என Justin Trudeau கூறுகிறார்.
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு குறித்த ஆணையத்தில் Justin Trudeau புதன்கிழமை (16) சாட்சியமளித்தார்.
பல Conservative அரசியல்வாதிகள் வெளிநாட்டு தலையீடுகளில் ஈடுபட்டனர் என கனடிய உளவுத்துறை நிறுவனங்களிடம் தகவல் இருப்பதாக பிரதமர் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
இந்தப் பெயர் பட்டியலில் Liberal அரசியல்வாதிகள், ஏனைய கட்சிகள் அரசியல்வாதிகளின் பெயர்களும் உள்ளதாக பிரதமர் ஒப்புக்கொண்டார்.
ஆனாலும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.
இந்த நிலையில் வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதமர் வெளியிடவேண்டும் என Conservative கட்சி கோரியுள்ளது.