தேசியம்
செய்திகள்

Markham நகர தமிழருக்கு எதிராக இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்

Markham நகரை சேர்ந்த தமிழர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

Markham நகரை சேர்ந்த 62 வயதான மகேந்திரன் தம்பிராத்திரம் இரண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

அவரது புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர் அவரால் வேறு பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்தனர்.

இவர் இந்த மாத ஆரம்பத்தில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் புதிய பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை எதிர்கொள்கிறார்.

முதலாவது சம்பவம் October 3 ஆம் திகதி Markham – Highglen சந்திப்புகளுக்கு அருகாமையில் நிகழ்ந்தது.

அந்தப் பகுதியில் நடந்து சென்ற பெண் ஒருவரை இவர் பாலியல் ரீதியில் தொட்டார் என கூறப்படுகிறது.

அதிகாரிகள் அன்று மாலை சந்தேக நபரை அடையாளம் கண்டு அவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர்.

இவர் பின்னர் நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மறுவாரம் October 12 ஆம் திகதி அவர் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் கைதானார்.

Denison – Cartmel Drive பகுதியில் பெண் ஒருவரின் இல்லத்தில் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இவரினால் வேறு எவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அவருக்கு எதிரான குற்றசாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

காட்டுத்தீ சூழ்நிலையில் உதவ இராணுவத்தை அழைத்துள்ள Alberta

Lankathas Pathmanathan

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja

“மலைக்கோட்டை வாலிபன்” திரைப்பட திரையிடல் Cineplex நிறுவனத்தால் இரத்து

Lankathas Pathmanathan

Leave a Comment