Liberal கட்சியை Justin Trudeau வழிநடத்த வேண்டுமா என்பது குறித்த விவாதத்தின் அவசியத்தை Liberal நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.
பிரதமர் Justin Trudeau கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்ற அழுத்தம் Liberal கட்சிக்குள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இது குறித்த “வலுவான” உரையாடல்கள் அவசியம் என Liberal நாடாளுமன்ற உறுப்பினர் Anthony Housefather தெரிவித்தார்.
இந்த விவாதம் கட்சியின் நாடாளுமன்ற குழுவுக்கும் நடக்க வேண்டும் எனவும் அது ஊடகங்களில் நடக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
இது போன்ற ஒரு விவாதத்தில் முழு நாடாளுமன்றக் குழுவும் பிரதமரும் கலந்து கொள்வார்கள் என நம்புவதாக Anthony Housefather கூறினார்.
Liberal கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளுமாறு பிரதமரிடம் முறைப்படி கோருவது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பல நாட்களாக விவாதத்தில் ஈடுபட்டு இருந்தனர் என கடந்த வாரம் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.