February 23, 2025
தேசியம்
செய்திகள்

இந்தியா- கனடா உயர்மட்ட தூதர்கள் வெளியேற்றம்

கொலைக் குற்றச்சாட்டுகள் மத்தியில் இந்தியாவும் கனடாவும் உயர்மட்ட தூதர்களை வெளியேற்றின.

இந்தியாவும் கனடாவும் தமது உயர்மட்ட தூதர்களை வெளியேற்றியுள்ளனர்.

கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP அண்மையில் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக கனடிய அரசு அறிவித்துள்ளது  .

கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையில் இவர்கள் ஆறு பேரும் தொடர்புடைய நபர்கள் என RCMP அடையாளம் கண்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் இந்தியா கடுமையாக மறுத்துள்ளது.

தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக கனடா எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

கனடாவின் குற்றச்சாட்டுகள் சீக்கிய பிரிவினைவாத பிரச்சாரத்தின் எதிர்வினை என இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் இந்தியாவுக்கான உயர் ஆணையர் Stewart Ross Wheeler உட்பட ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்தியா வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Related posts

12 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு Moderna தடுப்பூசிகள்: Health கனடா அங்கீகாரம்!

Gaya Raja

இறையாண்மை குறித்த வாக்கெடுப்பு பொறுப்பற்றது: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

எரிபொருள் விலையில் வரலாறு காணாத அதிகரிப்பை எதிர்கொள்ளும் கனடியர்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment