December 12, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபட்டனர்? RCMP குற்றச்சாட்டு!

மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களில் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக RCMP குற்றம் சாட்டுகிறது.

இதில் கொலைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்ற குற்றச் செயல்களும் அடங்குவதாக RCMP கூறுகிறது.

ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக கனடிய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது  .

கடந்த ஆண்டு British Colombia மாகாணத்தில் சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொலையில் இவர்கள் ஆறு பேரும் தொடர்புடைய நபர்கள் என RCMP அடையாளம் கண்டுள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆறு கனடிய தூதர்களை வெளியேற்றுவதாக இந்தியா அறிவித்தது.

இவர்களில் இந்திய தலைநகர் புதுடில்லியில் நிலை கொண்டுள்ள இரண்டு முக்கிய கனடிய தூதர்களும் அடங்குகின்றனர்.

கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் செயல்பாடுகள் குறித்து புதிய குற்றச்சாட்டுகளை Thanksgiving விடுமுறை தினமான திங்கட்கிழமை (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், RCMP ஆணையர் Mike Duheme முன்வைத்தார்.

கனடாவில் உள்ள இந்திய தூதர்களும், தூதரக அதிகாரிகளும் தங்கள் உத்தியோகபூர்வ பதவிகளை பயன்படுத்தி இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தமது விசாரணையில் தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.

இந்திய அரசாங்கத்திற்கான தகவல்களை நேரடியாகவோ அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மூலமாகவோ சேகரிப்பது போன்றவை இதில் அடங்குவதாக RCMP ஆணையர் தெரிவித்தார்.

கனடா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு வகையான நிறுவனங்கள், இந்திய அரசாங்கத்தின் முகவர்களால் தகவல்களைச் சேகரிக்க பயன்படுத்தப்பட்டதையும் சான்றுகள் காட்டுகின்றன.

இந்த தனிநபர்கள் மற்றும் வணிகங்களில் சிலர் இந்திய அரசாங்கத்திற்கு செயல்படும்படி வற்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்திற்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் கனடாவில் தெற்காசிய சமூகத்தின் உறுப்பினர்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படுகின்றன என Mike Duhemeகூறினார்.

இந்த விடயத்தில் RCMP சேகரித்த ஆதாரங்கள் கடந்த வார இறுதியில் இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

RCMP துணை ஆணையர் Mark Flynn, கனடிய தேசிய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு ஆலோசகர் Nathalie Drouin, கனடிய வெளியுறவு துணை அமைச்சர் David Morrison ஆகியோர் இணைந்து இந்த ஆதாரங்களை கனடாவில் உள்ள இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கு வழங்கினர்.

Related posts

கனடிய செய்திகள் – October மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

November 4ஆம் திகதி Don Valley மேற்கு இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

Leave a Comment