தேசியம்
செய்திகள்

தென்கிழக்கு ஆசியாவில் கனடா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்: Justin Trudeau

தென்கிழக்கு ஆசியாவில் கனடா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

இந்த வாரம் Laos நகரில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் (Association of Southeast Asian Nations Summit – ASEAN ) பிரதமர் கலந்து கொண்டார்.

வெள்ளிக்கிழமை (11) தனது Laos பயணத்தை முடித்துக் கொண்டார்.

அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர், தென்கிழக்கு ஆசியாவில் கனடா தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால், பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைய வேண்டும் என கூறினார்.

ASEAN உறுப்பு நாடுகளுடன் உறவுகளை தொடர்வது பிராந்தியத்தில் உள்ள பொருளாதார வாய்ப்புகளை அங்கீகரிப்பதாகும் எனவும் பிரதமர் கூறினார்.

ASEAN  நாடுகள் இணைந்து கடந்த ஆண்டு கனடாவின் நான்காவது பெரிய வர்த்தகப் பங்காளியாக அமைந்துள்ளது.

இந்த பிராந்தியத்துடனான கனடாவின் வர்த்தகம் 2015 முதல் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

Related posts

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Gaya Raja

சமூக ஊடக தளங்களுக்கு எதிராக மேலும் ஐந்து Ontario பாடசாலை வாரியங்கள் வழக்கு

Lankathas Pathmanathan

நாடு கடத்தலை எதிர் கொண்ட குடும்பத்தினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Leave a Comment