நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்திவைப்பது குறித்த எண்ணம் இல்லை என Liberal அரசாங்கம் தெரிவிக்கிறது.
அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிப்பதாக வெளியான செய்திகளை நிதி அமைச்சர் Chrystia Freeland நிராகரித்தார்.
நாடாளுமன்ற சபை அமர்வில் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடரும் சிறப்புரிமை விவாதத்தின் மத்தியில் Liberal அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கலாம் என கூறப்பட்டது.
ஆனாலும் சிறப்புரிமை விவாதத்தை முடிவுக்கு கொண்டுவர சபை அமர்வுகளை ஒத்தி வைப்பதை கருத்தில் கொள்ளவில்லை என Chrystia Freeland கூறினார்.
நாடாளுமன்றத்தை முடக்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வரும் நிலையில் இந்த சிறப்புரிமை விவாதம் ஆறாவது நாளை செவ்வாய்க்கிழமை (08) எட்டியது.
இந்த விவாதம் அவசியமான சட்டங்களை விவாதிப்பதற்கான வாய்ப்புகளை முடக்கிவிட்டதாக Liberal, NDP, Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.