அமெரிக்காவின் Florida மாநிலத்திற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
Milton சூறாவளி Florida மாநிலத்தை நெருங்கி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை வெளியானது.
முழு தீபகற்பத்திற்கும் இந்த பயண எச்சரிக்கையை கனடிய அரசாங்கம் வெளியிட்டது.
ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கனடியர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட கோரப்படுகிறது.
உள்ளூர் செய்திகள், வானிலை அறிக்கைகளை கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கனடியர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
Milton சூறாவளி செவ்வாய் (08), புதன் (09) கிழமைகளில் Floridaவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகளில் பல்வேறு இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.