தேசியம்
செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு: கனடிய நகரங்களில் அதிகரித்த எச்சரிக்கை

பல கனடிய நகரங்களில் காவல்துறையினர் தங்கள் பிரசன்னத்தை அதிகரித்துள்ளனர்

இஸ்ரேலில் ஹமாஸ் தலைமையிலான October 7 தாக்குதலின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் காவல்துறையினர் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

யூத, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், சமூக மையங்களை அண்மித்த பகுதிகளில் காவல்துறையினர் தங்கள் பிரசன்னத்தை அதிகரித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டில் உலகின் பல நாடுகளை போலவே, கனடாவின் பல்வேறு நகரங்களிலும் ஆயிரக்கணக்கான போராட்டங்கள் நடைபெற்றன.

ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்க கோரி இஸ்ரேல் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

பாலஸ்தீன ஆதரவாளர்கள் இரு தரப்புக்கும் இடையே யுத்த நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்.

Ottawa

கனடிய நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) ஒன்று கூடிய, Ottawa யூத சமூகத்தினர் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்ததுடன் பணயக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தினர்.

பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலை எதிர்த்து சனிக்கிழமை Ottawa வீதிகளில்  போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

Ottawa நகரின் யூத வழிபாட்டு தலங்களில் அதிகரித்த காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Montreal 

Montreal நகரில் யூத இனத்தவர் McGill பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே திங்கட்கிழமை (07) ஒரு விழிப்புணர்வு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பாலஸ்தீனிய ஆதரவு குழுக்கள் Concordia பல்கலைக்கழகத்தில் இருந்து  McGill பல்கலைக்கழகம் வரை பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த October மாதம் முதல் Montreal நகரில் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் தொடர்பாக 340 க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடந்துள்ளன.

இதில் காவல்துறையினர் 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

மேலும் பலர் வெறுப்புக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

Toronto

Torontoவில் Bathurst வீதியில் யூதர்கள் அதிகம் வசிக்கும் மூன்று பகுதிகளில் காவல்துறையினர் மூன்று கட்டளை தளங்களை அமைத்துள்ளனர்

நான்காவது  கட்டளை தளம் Torontoவின் பல்வேறு மசூதிகளை உள்ளடக்கி செய்யப்பட்டது.

2024ஆம் ஆண்டின் ஆரம்பம் முதல், 350 வெறுப்பு தூண்டுதல் குற்றங்கள் Toronto காவல்துறையில் பதிவாகியுள்ளது

இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 40 சதவீதம் அதிகரிப்பாகும்

Calgary 

Calgary நகரில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கடந்த ஆண்டு October 7 தாக்குதல்களில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் நகர சபையை நோக்கி பேரணி ஒன்றை ஞாயிற்றுக்கிழமை (06) முன்னெடுத்தனர்.

வீதியின் மறுபுறத்தில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர்.

Vancouver

Vancouver காவல்துறை திட்டமிடப்பட்ட பல போராட்டங்களை எதிர்பார்த்து காவல்துறையினரின் பிரசன்னத்தை அதிகரித்திருந்தது.

Related posts

முன்னாள் மனைவியை கொலை செய்த தமிழருக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Ontario மாகாண சபை உறுப்பினரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

இங்கிலாந்தில் தொழிற்கட்சியின் தேர்தல் வெற்றி கனடாவுக்கு சாதகமானது?

Lankathas Pathmanathan

Leave a Comment