Francophonie உச்சிமாநாட்டில் பிரதமர் Justin Trudeau பங்கேற்கின்றார்.
Lebanon Haiti ஆகிய Francophonie உறுப்பு நாடுகளில் நிலவும் நெருக்கடிகள், இந்த
உச்சிமாநாட்டில் கவனம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் Justin Trudeau வியாழக்கிழமை (03) France பயணமானார்.
இந்த இரண்டு நாள் உச்சி மாநாடு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இரண்டு வருடங்களு ஒருமுறை நடைபெறும் இந்த உச்சி மாநாடு, Villers-Cotterêts, Paris நகர்களில் இம்முறை நடைபெறுகிறது
இந்த மாநாட்டில் பிரெஞ்சு மொழியை மேம்படுத்துவதற்கான வழிகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிகழும் மோதல் இந்த உச்சிமாநாட்டில் பெரும் கவனத்தை ஈர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெஞ்சு மொழி பேசும் ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதில் கனடா இம்முறை கவனம் செலுத்துகிறது.
Tunisiaவில் இருந்து Francophonie தலைமை பதவியை France பெற்றது குறிப்பிடத்தக்கது.