December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு – மூன்று சந்தேக நபர்கள் கைது!

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

புதன்கிழமை (02) பிற்பகல் Yonge – Eglinton சந்திப்புக்கு அருகில் காவல்துறையினர் கொள்ளை சம்பவ விசாரணை ஒன்றை முன்னெடுத்து வந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்த விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதில் காவல்துறை அதிகாரியை சுட்டுக் காயப்படுத்தியதாக சந்தேக நபரும் அடங்குகிறார்.

காயமடைந்த காவல்துறை அதிகாரி Sunnybrook மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

காயமடைந்த அதிகாரி  29 வயதுடையவர் எனவும், அவர் Toronto காவல்துறையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாக Toronto காவல்துறைத் தலைவர் Myron Demkiw கூறினார்.

குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி அடிவயிற்றுப் பகுதியில் சுடப்பட்டதாகவும், அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் போது ஒரு காவல்துறை அதிகாரி தனது துப்பாக்கியை உபயோகித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Related posts

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகள் குறித்த விசாரணை?

Lankathas Pathmanathan

புலம்பெயர்ந்தோர் தொற்றின் காரணமாக மரணமடைவதற்கு அதிக ஆபத்து உள்ளது: Statistics கனடா

Gaya Raja

Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியானது !

Gaya Raja

Leave a Comment