Ontarioவில் ஆசிரியர் பற்றாக்குறை 2027 ஆம் ஆண்டில் மோசமடையலாம் என எச்சரிக்கப்படுகிறது.
Ontario மாகாண கல்வி அமைச்சு இந்த எச்சரிக்கையை வெளியிட்டது.
புதிய கல்வி அமைச்சருக்கான விளக்க ஆவணங்களில் இந்த எச்சரிக்கை உள்ளடக்கப்பட்டுள்ளது
ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கை வெளியானது.
Ontarioவில் உள்ள பல பாடசாலை வாரியங்கள் போதுமான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும் தக்கவைத்துக் கொள்வதிலும் சவால்களை எதிர்கொள்கின்றன என இந்த ஆவணம் கூறுகிறது.
இந்த சவால் பிரஞ்சு கல்வி, தொழில்நுட்ப கல்வி போன்ற பகுதிகளில் குறிப்பாக உணரப்படுகிறது