Scarborough நகரில் நிகழ்ந்த கத்திக் குத்தில் தமிழர் ஒருவர் மரணமடைந்தார்.
Orton Park – Ellesmere சந்திப்புக்கு அருகாமையில் உள்ள இல்லமொன்றில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த இல்லத்தில் பெண் அவரது சகோதரனால் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பலியான பெண் 54 வயதான துஷி லட்சுமணன் என காவல்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
துஷி லட்சுமணன், கூரிய முனை ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான பெண்ணின் சகோதரர் மீது இரண்டாம் நிலை கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதில் கைதானவர் 54 வயதான Toronto நகரை சேர்ந்த ராகுலன் லட்சுமணன் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைதான சந்தேக நபர் திங்கட்கிழமை (30) நீதிமன்றில் நிறுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் நிரூபிக்கப்படவில்லை.