முன்னாள் கனடிய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை – CSIS – இந்தத் தகவலை வெளியிட்டது.
முன்னாள் கனடிய அரசியல்வாதி ஒருவர் வெளிநாட்டு அரசாங்கத்தின் சார்பாக நாடாளுமன்றத்தில் செல்வாக்கு செலுத்த முயன்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீடு ஆணையம் வெள்ளிக்கிழமை (27) வெளியிட்ட ஆவணங்களில் இந்தத் தகவல் வெளியானது.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த விபரங்கள் அல்லது அவர் பணிபுரிந்ததாக கூறப்படும் நாடு குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் இது கனடாவின் ஜனநாயகத்தில் நேரடி வெளிநாட்டு தலையீட்டின் முன்னர் அறியப்படாத ஒரு நிகழ்வாகும் என கூறப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில் சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு தலையீடுகளின் ஆறு குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் பட்டியலை ஏனைய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து CSIS தயாரித்தது.