December 12, 2024
தேசியம்
செய்திகள்

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்த நிறுத்தம் அவசியம்: நட்பு நாடுகளுடன் கனடா அழைப்பு

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் நாடுகளின் பட்டியலில் கனடாவும் இணைந்துள்ளது.

லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் உடனடியாக 21 நாள் யுத்த நிறுத்தத்துக்கு கனடாவும் நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உடனடி யுத்த நிறுத்தத்துக்கு அமெரிக்கா, G7 நட்பு நாடுகள்,பல மத்திய கிழக்கு நாடுகளுடன் கனடா வியாழக்கிழமை (26) இணைந்து கொண்டது.

லெபனானுக்கு எதிராக  இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை முன்னெடுக்கும் நிலையில் இந்த யுத்த நிறுத்த கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

லெபனானுக்கு எதிரான இஸ்ரேல் வன்முறைகளை நிறுத்துமாறு பிரதமர் Justin Trudeau ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேல் லெபனானுக்கு எதிராக அண்மைய நிகழத்திய வான்வழித் தாக்குதல்களில் இரண்டு கனடியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் லெபனான் பிரதமர் Najib Mikati,கனடிய வெளியுறவுத்துறை அமைச்சர் Mélanie Joly ஆகியோர் இந்த வாரம் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

Manitoba எல்லையில் 406 KG போதைப்பொருள் மீட்பு!

Lankathas Pathmanathan

கனேடிய வெளியுறவு அமைச்சர் – உக்ரைன் ஜனாதிபதி சந்திப்பு

Lankathas Pathmanathan

B.C. NDP அரசாங்கத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment