இந்தியாவில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை உன்னிப்பாக பரிசீலித்து வருவதாக குடிவரவு அமைச்சர் Marc Miller தெரிவித்தார்.
கனடாவுக்கு வர விரும்புபவர்கள், மாணவர் விசா விண்ணப்பங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் நடவடிக்கையை கனடா முன்னெடுக்கும் என அமைச்சர் கூறினார்.
கனடாவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையை எதிர்கொள்ள கோடை முழுவதும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகள் அனுமதியில் கனடாவுக்குள் வருபவர்கள், அதன் மூலம் புகலிடம் கோருவது அல்லது அமெரிக்காவுக்குள் நுழைய முனைவது போன்ற நகர்வுகள் தடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் இருந்து பெறப்படும் விசா விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் கூடுதல் ஆய்வுகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் Marc Miller கூறினார்.
இந்தியாவில் இருந்து மாணவர் விசா விண்ணப்பங்களில் கனடாவிற்குள் வரும் பலரும் இங்கு அகதி தஞ்சம் கோரும் நிலை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.