December 12, 2024
தேசியம்
செய்திகள்

அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில் எதிர்க்கட்சி!

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் Justin Trudeau அரசாங்கத்தை வெற்றி கொள்ளும் முயற்சியை Conservative கட்சி  முன்னெடுத்துள்ளது.
Liberal அரசாங்கத்தை தோற்கடிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை Conservative தலைவர் Pierre Poilievre செவ்வாய்க்கிழமை (24) வலியுறுத்தினார்.

இந்த மூலம் தேர்தல் ஒன்றரை வலியுறுத்த Pierre Poilievre விருப்பம் தெரிவித்தார்.

செவ்வாய் சபை அமர்வின் ஆரம்பத்தில் Pierre Poilievre நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.

Conservative அரசாங்கத்தின் கீழ் கனடாவுக்கான தனது திட்டத்தை வெளிப்படுத்தும் பிரச்சார பாணி உரையின் மூலம் இந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவர் முன்வைத்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை Conservative கட்சியின் கொள்கைகள் மீதான வாக்கெடுப்பாக மாற்றுகின்றனர்.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கருத்துக் கணிப்புகள் Conservative கட்சிக்கு சாதகமாக உள்ளன.
இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த தேர்தலில் Conservative கட்சியின் பெரும்பான்மை அரசாங்கம் சாத்தியமாகும்.
இந்த  பிரேரணை மீதான விவாதம் செவ்வாய் மாலை நிறைவடைந்தது.
இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை (25)பிற்பகல் நடைபெற உள்ளது.
Conservative கட்சியை ஆதரிக்காத நிலையில் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்கப் போவதில்லை என NDP, Bloc Québécois கடசிகள் கடந்த வாரம் தெரிவித்தன.
இந்த இரண்டு கட்சிகளும் எதிர்த்து வாக்களித்தால் இந்த பிரேரணை தோற்கடிக்கப்படும்.

இதன் மூலம் NDP உடனான அரசாங்கத்தின் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தனது முதலாவது நம்பிக்கையில்லா பிரேரணையை Justin Trudeau வெற்றி கொள்வார்.

இந்த வாரம் மற்றொரு நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் வாய்ப்பை Conservative கட்சி பெறுகிறது.

சபை அமர்வின்  இரண்டாவது எதிர்க்கட்சி நாளான வியாழக்கிழமை (26) இந்த சந்தர்ப்பத்தை Conservative கட்சி பெறுகிறது.

இந்த இலையுதிர்கால சபை அமர்வில் மொத்தம் ஏழு எதிர்க்கட்சி நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது

அவற்றில் ஐந்து Conservative கட்சிக்கு வழங்கப்படுகிறது.

Related posts

கலைக்கப்படும் Peel பிராந்தியம்?

Lankathas Pathmanathan

தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் தாக்குதலின் முதலாவது ஆண்டு: கனடிய நகரங்களில் அதிகரித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment