லெபனானில் உள்ள கனடியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்படுகின்றனர்.
விமான சேவைகள் நடைமுறையில் உள்ள போது லெபனானில் உள்ள கனடியர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கோரப்படுகிறது.
இஸ்ரேலுக்கும் – லெபனான் போராளிக் குழுவான Hezbollahவுக்கும் இடையே அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இந்த கோரிக்கையை கனடிய அரசாங்கம் முன்வைத்துள்ளது
லெபனானில் உள்ள கனடியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு உதவிகள் எதுவும் தற்போது வழங்கப்படவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு வெளிநாட்டிலிருந்து அரசாங்கத்தின் உதவியுடன் கனடியர்கள் வெளியேற்றப்படுவது கடைசி தேர்வாகும் எனவும் வெளிவிவகார அமைச்சு கூறியது.
லெபனானில் 45,000 கனடியர்கள் உள்ளதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.